திமுக கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியாக கொடுத்திருந்தது. திமுகவுக்கு இது நெருக்கடியாக இருந்த நிலையில், வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் மகளிருக்கான உரிமைத் தொகை அறிவிப்பு வரும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
அதனால் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்புகள் வெளியாக அதிக வாய்ப்புகள் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிப்பதிலும் பிடிஆர் கவனம் செலுத்தி வருகிறார்.
இதேபோல் மு.க.ஸ்டாலின் முன்னெடுப்பில் உருவான மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன் உதவிகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கின்றன. பெண்கள் சுய தொழில் தொடங்கவும், அதற்கு அரசு சார்பில் கூடுதல் கடன் வசதி மற்றும் பயிற்சிகள் கொடுப்பது தொடர்பான அறிவிப்புகளும் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றிருக்கிறதாம்.
தமிழக நிதிநிலை அறிக்கை 2023 கூட்டத் தொடர் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தொடரில் முக்கியமான அறிவிப்புகளை முதலமைச்சர் முக.ஸ்டாலின் வெளியிட இருக்கிறார்.