GOOD FRIDAY IN TAMIL 2023: எங்களுடைய TAMILDAYTODAY இணையதளத்தில் முக்கியமான நாட்கள் குறித்த வரலாறு, வாழ்த்துக்கள் மற்றும் அனைத்து தகவல்களையும் விரிவாக காணலாம்.
புனித வெள்ளி 2023
GOOD FRIDAY IN TAMIL 2023: கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளி. ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டருக்கு முந்தைய வெள்ளிக்கிழமை உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களால் புனித வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது.
மனிதர்கள் தாங்கள் செய்த குற்றங்கள் மற்றும் பாவங்களை மன்னிக்கும்படி கடவுளிடம் முறையிட்டு, அதற்காக ஆடு, மாடுகளை பலி கொடுப்பது, உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படும் ஆயிரங்கால நம்பிக்கை. இதே நம்பிக்கையை கொண்டிருந்த யூத மதத்தில் பிறந்தவர்தான் இயேசு கிறிஸ்து.
பிரிவினைவாதமும், பிற்போக்குவாதமும் புரையோடிக் கிடந்த யூத மதத்தில், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்ற கடுமையான சட்ட திட்டங்களுக்கு பஞ்சமில்லை.
யூதர்களை தவிர மற்ற இனத்தவர்கள் அனைவரும் கீழானவர்கள் என தீண்டாமையை கற்பித்த யூத மதம், கஷ்டங்களுக்கும், நோய்களுக்கும் பாவமே காரணம் என்றும் போதித்தது.
ஆனால், எதிரிக்கும் அன்பு செய், ஒரு கன்னத்தில் அறைந்தால், மறு கன்னத்தை காட்டு என்ற இயேசுவின் அன்பான அணுகுமுறையும், அனைவரும் சமம் என்று அவர் போதித்த ஒற்றுமையும் யூதர்களை கொதித்து எழ வைத்தது.
அத்துடன், பெருநோயால் பாடுபட்டவர்களையும், கண் தெரியாதவர்களையும், நடக்கவே முடியாதவர்களையும் தானே குணப்படுத்தினார் இயேசு பிரான்.
யூதர்களின் வணிகமயமாகிவிட்ட ஆலயங்களுக்கு எதிராகவும், வஞ்சிக்கப்படும் ஏழைகளுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வந்தார் இயேசு கிறிஸ்து. வருமானம் கெட்டு, ஆண்டாண்டு காலமாக தாங்கள் அனுபவித்து வந்த சொகுசு வாழ்க்கை, மழைப்பொழுதில் கரையும் மண் சுவராக மாறிவிடுமோ என அச்சமடைந்தனர் யூத மத தலைவர்கள்.
GOOD FRIDAY IN TAMIL 2023: அரசருக்கே ஆலோசனை சொல்லும் இடத்தில் இருந்த யூத மதத் தலைவர்கள், கர்த்தராகிய இயேசு மீது பலவிதமான பொய்ப் புகார்களை அடுக்கத் தொடங்கினர்.
அவரை கைது செய்ய முடிவு செய்த யூத மத தலைவர்கள், இயேசுவின் 12 சீடர்களில் ஒருவரான யூதாசுக்கு 30 வெள்ளிக்காசுகளை கொடுத்து, அவரின் இருப்பிடத்தை காட்டச் சொல்லி அழைத்துச் சென்றனர்.
கெத்சமெனித் தோட்டத்திற்கு காவலர்களுடன் சென்ற யூதாஸ், போதகரான இயேசுவை முத்தமிட்டு காட்டிக் கொடுத்தார் என யோவான் 18வது அதிகாரத்தில் ஒன்று முதல் 11வது வசனம் வரை விவரிக்கிறது, கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிள்.
யூதாஸால் காட்டிக் கொடுக்கப்பட்ட இயேசு, பிலாத்து மன்னன் முன் நிறுத்தப்பட்டபோது, அவர் மீது குற்றம் கண்டுபிடிக்க முடியவில்லை. யூத மத தலைவர்களின் எதிர்ப்புக்கு ஆளாக வேண்டாம் என நினைத்த மன்னனோ, அவர்களின் விருப்பத்திற்கு ஏற்பவே இயேசுவுக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட, முள் கிரீடம் அணிவிக்கப்பட்டு, சிலுவை சுமக்கச் செய்து, கல்வாரி மலையின் உச்சியில் சிலுவையில் அறையப்பட்டார் கர்த்தராகிய இயேசு பிரான்.
GOOD FRIDAY IN TAMIL 2023: அப்போது அவருக்கு வயது 33. வெள்ளிக்கிழமை, வெயில் கொளுத்திய மதிய வேளையில் இயேசுவை சிலுவையில் அறைந்தபோது, உலகமே இருளில் மூழ்கியதாக கூறுகிறது பைபிள்.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட துன்ப நிகழ்வை நினைவு கூறும் வகையிலும், அதற்கு மாியாதை செய்யும் வகையிலுமே அனுசரிக்கப்படுகிறது புனித வெள்ளி.
உலகத்தை ரட்சிக்க வந்த கர்த்தர், சிலுவையில் அறையப்பட்டு இறந்ததன் மூலம், அவா் இந்த உலகின் பாவங்கள் அனைத்தையும் தானே எடுத்துக் கொண்டாா் என நம்புகின்றனர் கிறிஸ்தவா்கள்.
GOOD FRIDAY IN TAMIL 2023: இந்த புனித வெள்ளி ஸ்பெயின் மொழியில் ‘வியா்னஸ் சான்தோ’ (Viernes Santo) அதாவது பாிசுத்தமான வெள்ளி என்றும், ஜொ்மனி மொழியில் ‘காா்ஃப்ரைட்டாக்’ (Karfreitag) என அதாவது துன்பங்களின் வெள்ளி என்றும் அழைக்கப்படுகிறது.
சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்து, 3ஆம் நாளில் உயிர்த்தெழுந்து வின்னுலகை அடைந்ததை குறிக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுவதுதான் ஈஸ்டர் பெருவிழா.
புனித வெள்ளி அன்று கருப்பு நிற ஆடை அணிவது ஏன் தெரியுமா?
GOOD FRIDAY IN TAMIL 2023: புனித வெள்ளியின் மையக் கருத்து தீமையின் மீது நன்மை கொண்ட வெற்றியை நினைவூட்டுவதாகும்.
ஈஸ்டருக்கு முன் வரும் வியாழக்கிழமை, மான்டி தா்ஸ்டே அல்லது பொிய வியாழன் என்று அழைக்கப்படுகிறது. இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாள், அதாவது பொிய வியாழன் அன்று இரவு தன்னுடைய சீடா்களோடு சோ்ந்து இறுதி இரவு உணவை உண்பாா்.
அந்த பொிய வியாழனுக்கு மறுநாள் வரும் வெள்ளிக் கிழமை அல்லது ஈஸ்டா் ஞாயிற்றுக் கிழமைக்கு முந்தைய வெள்ளிக் கிழமை புனித வெள்ளியாக அனுசாிக்கப்படுகிறது.
கிரகோாியன் நாட்காட்டியின்படி, ஒவ்வொரு ஆண்டும் புனித வெள்ளி வெவ்வேறு தேதிகளில் வருகிறது. இந்த வருடம் ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதியான இன்று வெள்ளிக் கிழமை புனித வெள்ளி அனுசாிக்கப்படுகிறது. ஏப்ரல் 17 ஆம் தேதி ஈஸ்டா் பெருவிழா வருகிறது. புனித வெள்ளியின் மையக் கருத்து என்னவென்றால் தீமையின் மீது நன்மை கொண்ட வெற்றியை நினைவூட்டுவதாகும்.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறந்ததன் மூலம், அவா் இந்த உலகின் பாவங்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டாா் என்று கிறிஸ்தவா்களின் நம்பிக்கை.
அவா் தனது உயிரைத் தியாகம் செய்ததன் மூலம் எல்லா மக்களையும் அவா்களுடைய பாவங்களிலிருந்து மீட்டு அவா்கள் அனைவரும் மோட்சத்திற்கு செல்வதற்கு தகுதியாக்கினாா் என்பம் அவா்களின் நம்பிக்கையாகும்.
பொதுவாக புனித வெள்ளி அன்று கிறிஸ்தவா்கள் தேவாலயங்களுக்குச் சென்று, அந்த நாள் முழுவதும் வேண்டுதல் செய்வதில் ஈடுபடுவா். ஒருசில கிறிஸ்தவா்கள் அந்த நாள் முழுவதும் இயேசுவின் இறப்பை நினைத்து, நோன்பு இருப்பா்.
அதுமட்டுமல்லாமல் இயேசு கிறிஸ்துவின் பாடுகள் மற்றும் இறப்பை நினைவு கூறும் வகையில் சிலர் கருப்பு வண்ணத்தில் ஆடைகளை அணிவா். சிலா் அந்த நாள் முழுவதும் யாாிடமும் பேசாமல் மௌன விரதம் இருப்பா்.
இறுதியாக, இயேசு கிறிஸ்துவின் சிலுவை இறப்பு உலகில் வாழும் எல்லா மனிதா்களின் பாவங்களும் மன்னிக்கப்பட்டதை புனித வெள்ளி நினைவுபடுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.