TNPSC GROUP 2 MAIN EXAMINATIONS COMMON TOPICTNPSC GROUP 2 MAIN EXAMINATIONS COMMON TOPIC

TNPSC GROUP 2 MAIN EXAM COMMON TOPIC – TEST 20 – இந்தியாவில் பெண்கள் திருமண குறித்த அறிக்கை 2022 / REPORT ON WOMEN’S MARRIAGE IN INDIA 2022

TAMIL

  • ஏறக்குறைய 30 சதவீத இந்தியப் பெண்கள் 21 வயதிற்குள் திருமணம் செய்து கொள்கிறார்கள், மேலும் கிராமப்புற பெண்களில் மூன்றில் ஒரு பகுதியினர் 18 முதல் 20 வயதிற்குள் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்று அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. திருமண வயது என்பது ஆண்களுக்கு 21 என்றும் பெண்களுக்கு 18 என்றும் நிர்ணயிக்கபட்டது.
  • இந்த ஆண்டு மத்திய அரசு பெண்களின் திருமண வயதையும் 21 ஆண்டுகளாக மாற்ற சட்டசபையில் தீர்மானம் கொண்டுவந்து. இந்நிலையில் தி டைம்ஸ் ஆஃப் இந்தியா கருத்துப்படி, ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் 21 வயதிற்குள் திருமணமாகும் பெண்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
  • மறுபுறம், 2020 ஆண்டின் தரவுகளின்படி ஜம்மு காஷ்மீரில் 21 வயதுக்கு முன் பெண்கள் திருமணம் செய்து கொண்ட எண்ணிக்கை 10 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.
  • டெல்லியில் இந்த எண்ணிக்கை சுமார் 17 சதவீதமாக இருக்கிறது . நகர்ப்புற இந்தியாவில் 18.6 சதவீத பெண்கள் 18 முதல் 20 வயதுக்குள் திருமணம் செய்து கொண்டதாக அறிக்கை தெரிவித்துள்ளது.

சராசரி திருமண வயது

  • திருமண வயது அதிகம் உள்ள மாநிலம் என்று பார்த்தால் ஜம்மு மற்றும் காஷ்மீர் முதலில் உள்ளது. அங்கு சராசரி திருமண வயது 26 ஆகும். இதைத் தொடர்ந்து பஞ்சாப், டெல்லி ஆகிய மாநிலங்கள் இடம் பிடித்தன.
  • To Know More About – CSL PLASMA PROMO CODE
  • மிக குறைவானது என்று பார்க்கும்போது, மேற்கு வங்கம் மற்றும் ஜார்கண்ட் திருமணத்தின் சராசரி வயது 21 ஆகவும், ஒடிசா 22 ஆகவும் உள்ளது. நாட்டின் சராசரி வயது 22.7 ஆக இருந்தது.

இந்தியாவில் குழந்தை திருமணங்கள்

  • குழந்தைத் திருமணங்களைப் பொறுத்தவரை, கேரளாவில் 2020 இல் ஒன்று கூட இல்லை. ஆனால் கர்நாடகாவில் குழந்தை திருமணங்களின் எண்ணிக்கை ஆபத்தான அளவை எட்டியுள்ளது.
  • 2021-2022 இல் குறைந்தது 418 குழந்தை திருமணங்கள் நடந்துள்ளது. 2017-2018 உடன் ஒப்பிடும்போது 300 சதவீதம் அதிகரித்துள்ளது.
  • கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலின் போது ஏற்பட்ட குடும்ப பொருளாதார நெருக்கடியால் குழந்தை திருமணங்கள் அதிகரித்துள்ளதாக சில நிபுணர்கள் கூறுகின்றனர்.

குழந்தை திருமணங்கள் தடுப்பு 

  • குழந்தைத் திருமணங்களைத் தடுக்கும் வகையில் ‘குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் (பிசிஎம்ஏ), 2006’ ஐ அரசாங்கம் இயற்றியுள்ளது. 1098 என்ற சைல்டுலைனும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • இது நெருக்கடியில் உள்ள குழந்தைகளுக்கான 24X7 தொலைபேசி அவசர கால சேவையாகும், மேலும் காவல்துறை, CMPOக்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுகள் போன்றவற்றின் ஒருங்கிணைப்பில் தேவையான உதவிகளை வழங்குகிறது. இருப்பினும் குழந்தை திருமணங்களின் எண்ணிக்கை குறையவில்லை.

கிராமப்புற இந்திய தரவு

  • நகர்ப்புற நகரங்களுடன் ஒப்பிடும்போது, ​​நாட்டின் கிராமப்புறங்களில் குழந்தைத் திருமணங்கள் அதிகம் நடைபெறுகின்றன. 18 வயதுக்குட்பட்ட பெண்களின் திருமணம் ஜார்க்கண்டில் அதிகபட்சமாக 5.8 சதவீதமாகவும், மேற்கு வங்காளத்தில் 4.7 சதவீதமாகவும் உள்ளது.
  • பீகார், உத்தரபிரதேசம் மற்றும் ஒடிசாவில் 3 சதவீதத்துக்கும் அதிகமான பெண்கள் 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்துகொண்டுள்ளனர். குழந்தை மணமகளின் சராசரி வயது தெலுங்கானாவில் 15 வயதாகவும், ராஜஸ்தானில் 15.4 ஆகவும் இருந்தது.
  • மறுபுறம், டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப், உத்தரகாண்ட், ஹரியானா மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள் 21 வயதுக்கு மேற்பட்டவர்கள் திருமணம் செய்து கொள்கின்றனர். நகர்ப்புறங்களில், 21 வயதுக்கு மேல் திருமணம் செய்துகொண்ட பெண்களின் விகிதம் அதிகமாக இருந்தது. சில மாநிலங்களில் குழந்தை திருமண சம்பவங்கள் இல்லை.
  • நகர்ப்புறங்களில் குழந்தைத் திருமணங்களின் விகிதத்தில் மேற்கு வங்கத்தில் 4.4 சதவீதமும், உ.பி.யில் 3.6 சதவீதமும் உள்ளது.

ENGLISH

  • Nearly 30 percent of Indian women marry before the age of 21, and a third of rural women marry between the ages of 18 and 20, according to government data. The age of marriage was fixed at 21 for men and 18 for women.
  • This year, the central government also brought a resolution in the assembly to change the age of marriage for women to 21 years. However, according to The Times of India, Jharkhand and West Bengal are at the top of the list of women getting married under the age of 21.
  • On the other hand, the number of girls married before the age of 21 in Jammu and Kashmir is less than 10 percent as per 2020 data. In Delhi, this figure is around 17 percent. According to the report, 18.6 percent of women in urban India are married between the ages of 18 and 20.

Average age of marriage

  • If you look at the state with the highest marriage age, Jammu and Kashmir is the first. The average marriage age there is 26. This was followed by the states of Punjab and Delhi.
  • Looking at the lowest, the average age of marriage in West Bengal and Jharkhand is 21 and Odisha is 22. The country’s median age was 22.7.

Child marriages in India

  • As far as child marriages are concerned, there is not a single one in Kerala in 2020. But the number of child marriages in Karnataka has reached alarming levels.
  • At least 418 child marriages took place in 2021-2022. 300 percent increase compared to 2017-2018.
  • Some experts say child marriages are on the rise due to family economic strain during the spread of the coronavirus pandemic.

Prevention of child marriages

  • The Government has enacted the ‘Prevention of Child Marriage Act (PCMA), 2006’ to prevent child marriages. A childline called 1098 has also been introduced.
  • It is a 24X7 telephone emergency service for children in crisis and provides necessary assistance in coordination with Police, CMPOs, District Child Protection Units etc. However, the number of child marriages has not decreased.

Rural India data

  • Child marriages are more common in rural areas of the country as compared to urban cities. Marriage of girls below 18 years is highest in Jharkhand at 5.8 percent and West Bengal at 4.7 percent.
  • More than 3 percent of girls in Bihar, Uttar Pradesh and Odisha are married before the age of 18. The average age of child brides was 15 in Telangana and 15.4 in Rajasthan.
  • On the other hand, in Delhi, Maharashtra, Gujarat, Punjab, Uttarakhand, Haryana and Himachal Pradesh, more than 80 percent of women marry above the age of 21.
  • In urban areas, the proportion of women married above the age of 21 was higher. Some states have no incidence of child marriage. The proportion of child marriages in urban areas is 4.4 per cent in West Bengal and 3.6 per cent in UP.

ரத்த சோகை – இந்தியா, தமிழ்நாட்டு பெண்கள் நிலை / ANEMIA – STATUS OF WOMEN IN TAMIL NADU, INDIA

TAMIL

  • இந்தியாவில் 15-49 வயதுடைய ஆண்களில் சுமார் நான்கில் ஒரு பங்கினருக்கும், அதே வயதுடைய பெண்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கும் ரத்த சோகை உள்ளது தெரியவந்துள்ளது.
  •  ஐந்து வயதுக்கும் குறைவான இந்தியக் குழந்தைகளில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமான குழந்தைகளுக்கு ரத்த சோகை உள்ளது.
  • முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்திய அளவில் குழந்தை பெறும் வயதுள்ள பெண்களுக்கு ரத்த சோகை அதிகரித்துள்ளதையே தரவுகள் காட்டுகின்றன. தமிழ்நாட்டில் முந்தைய ஆண்டுகளைவிட குறைந்திருந்தாலும், அதில் கவலைப்பட வேண்டிய ஒரு தகவலும் உள்ளது.
  • 2019-2021 காலகட்டத்தில் நடத்தப்பட்ட தேசிய குடும்பநல ஆய்வு -5இல், 15-49 வயதாகும் பெண்களில் 57% பேருக்கும், அந்த வயதுக் குழுவின் ஒரு பகுதியான 15-19 வயதாகும் பெண்களில் 59.1% பேருக்கும் ரத்த சோகை உள்ளது தெரிய வந்தது.
  • 2015-16இல் நடத்தப்பட்ட தேசிய குடும்பநல ஆய்வு – 4, 15-49 வயதாகும் பெண்களில் 53.1% மற்றும் 15-19 வயதாகும் பெண்களில் 54.1% பேருக்கும் ரத்த சோகை இருந்ததாகக் கூறுகிறது.
  • 15-49 வயதுடைய ஆண்களில் ரத்த சோகை இருப்பவர்களின் விகிதம் தேசிய குடும்பநல ஆய்வு – 4 காலகட்டத்தில் 22.7 சதவிகிதத்தில் இருந்து, ஆய்வு -5 காலகட்டத்தில் 25 சதவிகிதமாகவும், 15-19 வயதுடைய ஆண்களில் அது 29.2 சதவிகிதத்தில் இருந்து 31.1 சதவிகிதமாகவும் அதிகரித்துள்ளது.
  • குழந்தைகளையும் ரத்த சோகை விட்டுவைக்கவில்லை. பிறந்து 6 முதல் 59 மாதம் ஆகியுள்ள குழந்தைகளிடையே நிலவும் ரத்த சோகை விகிதமும் 2015-16இல் 58.6 சதவிகிதத்தில் இருந்து, 2019-21 காலகட்டத்தில் 67.1% ஆகியுள்ளது.
  • குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என அனைத்து குழுவினரிடையேவும் ரத்த சோகை பாதிப்பு நகர்புறப் பகுதிகளில் இருப்பவர்களை விட கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு அதிகமாக உள்ளதை தேசிய குடும்பநல ஆய்வு -4 மற்றும் 5இன் தரவுகள் வெளிக்காட்டுகின்றன.
  • தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2015-16இல் 15-49 வயதுக்கு உட்பட்ட பெண்களில் 55 சதவிகிதமாக இருந்த ரத்த சோகை, 2020-21இல் 53.4 சதவிகிதம் ஆக குறைந்துள்ளது. 15-19 வயதினரிடையே இது 54.2 சதவிகிதத்தில் இருந்து, 52.9 சதவிகிதம் ஆக குறைந்துள்ளது.
  • 15-49 வயதில் இருக்கும் ஒட்டுமொத்த பெண்களுக்கு ரத்த சோகை குறைவாக இருந்தாலும், இதே வயதுக் குழுவில் இருக்கும் கருவுற்ற பெண்களுக்கான ரத்த சோகை 44.4 சதவிகிதத்தில் இருந்து 48.3 சதவிகிதம் ஆகியுள்ளது. ரத்த சோகை பாதிப்பு முக்கியமாக இருக்கக் கூடாதவர்கள் கருவுற்ற பெண்கள்தான் எனும்போது இந்த விகிதம் உயந்திருப்பது நிச்சயம் நல்ல சமிக்ஞை அல்ல.
  • உலகெங்கிலும் ஐந்து வயதுக்கும் குறைவான 42% குழந்தைகளுக்கும், கர்ப்பிணிப் பெண்களில் 40% பேருக்கும் ரத்த சோகை குறைபாடு இருப்பதாக மதிப்பிடப்படுகிறது என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் இணையதளம். அப்படியானால் இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் ரத்த சோகை பாதிப்பு விகிதம் சர்வதேச சராசரியைவிட அதிகம்.

ENGLISH

  • About one-fourth of men aged 15-49 in India and more than half of women of the same age group are found to be anemic. More than two-thirds of Indian children under the age of five are anemic.
  • Data shows an increase in anemia among women of childbearing age in India compared to previous years.
  • Even though Tamil Nadu has decreased from the previous years, there is one thing to worry about.
  • In the National Family Health Survey-5 conducted during the period 2019-2021, 57% of women aged 15-49 years and 59.1% of women in the age group 15-19 years were found to be anemic.
  • The National Family Health Survey conducted in 2015-16 – 4 reported that 53.1% of women aged 15-49 years and 54.1% of women aged 15-19 years had anaemia.
  • The proportion of anemic men aged 15-49 years increased from 22.7 percent in the National Family Health Survey-4 period to 25 percent in the Survey-5 period, and in men aged 15-19 years it increased from 29.2 percent to 31.1 percent.
  • Anemia did not spare the children either. The prevalence of anemia among children aged 6 to 59 months has also increased from 58.6 percent in 2015-16 to 67.1 percent in 2019-21.
  • Data from National Family Welfare Survey-4 and 5 reveal that the prevalence of anemia among all groups including children, men and women is higher in rural than in urban areas.
  • For Tamil Nadu, the prevalence of anemia among women aged 15-49 in 2015-16 has decreased to 53.4 percent in 2020-21, from 55 percent in 2015-16. Among 15-19-year-olds, it dropped from 54.2 percent to 52.9 percent.
  • Although anemia was lower overall for women aged 15-49, anemia for pregnant women in the same age group rose from 44.4 percent to 48.3 percent. A rise in this ratio is definitely not a good sign when pregnant women are the ones who should not be at high risk of anemia.
  • It is estimated that 42% of children under the age of five and 40% of pregnant women worldwide are anemic, according to the World Health Organization website. So India and Tamil Nadu’s anemia prevalence rate is higher than the international average.

தமிழ்ப் பரப்புரைக் கழகம் / TAMIL PARAPPURAI KALAKAM

TAMIL

  • உலகில் ஏறத்தாழ 90 நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கும் இளந்தலைமுறையினருக்கும் தமிழ்மொழியைக் கற்பிக்கவும், பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டு செல்லவும் பல முயற்சிகளைத் தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.
  • அதன் ஒரு பகுதியாக, தமிழை எளிமையாகக் கற்பதற்கான தமிழ்ப் பாடநூல்கள், வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் தமிழைக் கற்பிக்கும் அமைப்புகளுக்கு நிதியுதவி வழங்குதல், தமிழைத் திறம்பட கற்பிக்க ஆசிரியர்களுக்கான பயிற்சி வழங்குதல் முதலான நடவடிக்கைகள் மேற்கொள்ள தமிழ்ப் பரப்புரைக் கழகம் உருவாக்கப்படும் என அரசு ஆணை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசால் அப்பணிகளுக்கு முதற்கட்டமாக ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • தமிழ் வளர்ச்சித்துறையின் அறிவிப்பான தமிழ்ப் பரப்புரைக் கழகம் திட்டமானது தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  • இதன் மூலம், புலம்பெயர்ந்த தமிழர்கள் மற்றும் அயல்நாட்டில் வசிக்கும் தமிழர்களின் மொழி கற்கும் சூழல் அறிந்து ஐந்து நிலைகளாகப் புதிய பாடத்திட்டத்தை உருவாக்கிப் பயன்பாட்டு அடிப்படையில் புத்தகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
  • மேலும், அப்புத்தகத்தை 24 மொழிகளில் மொழிபெயர்த்து வழங்குதல், புத்தகத்திலுள்ள பாடப்பொருண்மைகள் எளிதில் புரியும் வண்ணம் செயல்வழிக் கற்றல் என்ற அடிப்படையில் கற்பித்தல் துணைக்கருவிகளை உருவாக்கி அதனை இணையம் வழியாக வழங்குதல், பாடப்பொருண்மைகளைப் படித்துக் காட்டும் விதமான ஒளி ஒலிப் புத்தமாக வடிவமைத்தல், புத்தகத்தில் இடம்பெற்றுள்ள கருத்துகளைத் தெளிவாக அறிவதற்கேற்ப அசைவூட்டும் காணொலிகளை வழங்குதல், சொற்களஞ்சியத்தைப் பெருக்கும் விதமாக மின்அட்டைகள் வழங்குதல், புத்தகத்திலுள்ள பயிற்சிகளைத் தானே செய்து பழகுவதற்காக இணையம் வழியாக கற்றல் பயிற்சியை வழங்குதல், தமிழைப் பன்முக நோக்கில் கற்பிக்க கற்றறிந்த ஆசிரியர்களைக் கொண்டு இணையம் வழியில் வகுப்புகள் எடுத்தல், தேவைகளுக்கேற்ப ஆசிரியர்கள்/கலைப் பயிற்றுநர்களை அயல்நாட்டுக்கு அனுப்புதல் முதலான பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
  • தமிழ் மொழியைப் பிற மொழியினரும் கற்கவும், பல்வேறு நிலைகளுக்குரிய பாடங்களைக் கற்றுத் தேர்வு எழுதி உரிய நிலைகளில் சான்றிதழ்களைப் பெறவும் தமிழ் பரப்புரைக்கழகம் திட்டங்களை உருவாக்கியுள்ளது.

ENGLISH

  • The Government of Tamil Nadu is taking many initiatives to teach Tamil language and cultural elements to Tamils ​​and the younger generation living in about 90 countries and foreign states in the world.
  • As a part of it, the government issued an order to form a Tamil Parappurai Kalakam to carry out activities such as Tamil textbooks for easy learning of Tamil, providing financial assistance to organizations that teach Tamil in foreign countries and foreign states, and providing training for teachers to teach Tamil effectively. Subsequently, the Government of Tamil Nadu has allocated one crore rupees for the works in the first phase.
  • The Tamil Parappurai Kalakam, announced by the Tamil Development Department, is being implemented by the Tamil Internet Education Corporation.
  • Through this, a new curriculum has been created in five levels and books have been developed based on the knowledge of the language learning environment of Tamils ​​living abroad and Tamils ​​living abroad.
  • Also, translating and presenting the textbook in 24 languages, creating teaching aids based on hands-on learning to make the subject matter in the book easy to understand and providing it via the Internet, designing a light and sound book to read and show the subject matter, providing moving videos to clearly understand the concepts contained in the book, providing e-cards to increase vocabulary, in the book Activities such as providing online learning training for self-practice, taking online classes with experienced teachers to teach Tamil in a multifaceted manner, and sending teachers/art instructors to foreign countries as per the needs, etc. will be carried out.
  • The Tamil Parappurai Kazhagam has developed programs for students of other languages ​​to learn Tamil and to take various levels of subjects and take exams and obtain certificates at appropriate levels.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *