TNPSC GROUP 2 MAIN EXAMINATIONS COMMON TOPICTNPSC GROUP 2 MAIN EXAMINATIONS COMMON TOPIC
  • நடப்பு விவகார – பொது அறிவு வினாடி வினா பிரிவில் ஒவ்வொரு போட்டியாளருக்கும் பரீட்சை எழுதுவதை எளிதாக்குவதை TNPSC SHOUTERS நோக்கமாகக் கொண்டுள்ளது
  • இத்தேர்வில், பொது அறிவிப் பிரிவில் இருந்து 40 முதல் 50 கேள்விகள் கேட்கப்படும்.
  • தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களின் மன உளைச்சலைக் குறைக்கும் வகையிலும் கீழே சில தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
  • மாணவர்களுக்கு ஆக்கப்பூர்வமான சூழ்நிலையை உருவாக்குவதின் முக்கிய படிநிலையாக இந்த கட்டுரை இருக்கும் என்று நம்புகிறோம்.
  1. நான் முதல்வன் திட்டம் / NAAN MUTHALVAN SCHEME

TAMIL

  • தமிழகத்தின் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள், படிப்பில் மட்டுமல்லாது, வாழ்க்கையிலும் வெற்றியாளராக்கும் வகையில் திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாக ‘நான் முதல்வன்’ என்கிற புதிய திட்டம் அமைந்துள்ளது.
  • இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞர்களைப் படிப்பில், அறிவில், சிந்தனையில், ஆற்றலில், திறமையில் மேம்படுத்தி நாட்டுக்கு வழங்குதல் ஆகும்
  • இந்தத் திட்டத்தின் சிறப்பம்சமானது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு அதனை மேலும் ஊக்குவிப்பது ஆகும்.
  • மாணவர்கள் அடுத்தடுத்து என்ன படிக்கலாம். எங்கு படிக்கலாம். எப்படிப் படிக்கலாம் என்றும் வழிகாட்டப்படும்
  • தமிழில் தனித் திறன் பெற சிறப்புப் பயிற்சியுடன் ஆங்கிலத்தில் எழுதவும், சரளமாகப் பேசுவதற்கும், நேர்முக தேர்வுக்கு தயாராவது குறித்தும் பயிற்சிகள் வழங்கப்படும்.
  • தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு Coding, Robotics போன்ற பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.
  • ஒவ்வொரு துறையிலும் தலைசிறந்த சாதனையாளர்களைக் கொண்டு கோடை சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும்.
  • மனநல மருத்துவர்கள், உடல்நல மருத்துவர்களைக் கொண்டு திடமான உணவு வகைகள் உட்கொள்வது குறித்து ஆலோசனைகள் வழங்குவதுடன், உடற்பயிற்சி, நடை, உடை, நாகரீகம், மக்களோடு பழகுதல், ஆகியவை குறித்தும் பயிற்சிகள் வழங்கப்படும்.
  • தமிழ்ப் பண்பாடு, மரபு குறித்த விழிப்புணர்வும் மாணவ, மாணவியர்களிடம் ஏற்படுத்தப்படும்.
  • இதற்கான பயிற்சிகள் அனைத்தும், தலைசிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு நேரடிப் பயிற்சி, இணைய வழிப் பயிற்சி, அவரவர் கல்லூரியில் பயிற்சி, மாவட்ட ரீதியாக பயிற்சி எனத் தேவைக்கேற்ப பயிற்சிகள் அளிக்கப்படும்.
  • ஒவ்வொரு பள்ளியிலும் வழிகாட்டி ஆலோசனை மையம் உருவாக்கப்படும். இதற்கென தனியே கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தொடர் வகுப்புகள் நடத்தப்படும்.
  • முன்னாள் மாணவர்களைக் கொண்டு அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தொடர் நெறிப்படுத்தும் (mentoring) முறையும் அறிமுகப்படுத்தப்படும்.
  • கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு வெளிநாடுகளில் வேலைவாய்ப்யை உறுதி செய்ய அவரவர் விருப்பத்திற்கேற்ப அயல்நாட்டு மொழிகள் (Foreign Language) கற்பிக்கப்படுவதற்கு இத்திட்டத்தில் வழிவகை செய்யப்படும்.
  • அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் Industry 4.0 தரத்திற்கு உயர்த்தப்படும்.
  • மாணவ, மாணவியர்களின் தகுதி மற்றும் ஆர்வத்திற்கு ஏற்ப, நாட்டின் தலைசிறந்த நிறுவனங்கள்/புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள்/ திறன் மேம்பாட்டு நிறுவனங்களில் சேர்க்கையையும் இந்த தொடர் பயிற்சிகள் மூலம் உறுதி செய்யப்படும்.

ENGLISH

  • A new program called ‘Naan Mutuvan’ is a skill development and guidance program to make school and college students and youth of Tamil Nadu successful not only in studies but also in life.
  • The main objective of this scheme is to provide 10 lakh youth to the country every year in education, knowledge, thinking, energy and skills.
  • The highlight of this scheme is to identify and promote the unique talents of students of Government and Government aided schools, colleges and universities.
  • What students can study next. Where can you read? It will also guide you on how to study
  • Special training in writing and speaking in English and preparation for interview will be provided along with special training to acquire proficiency in Tamil.
  • Training classes like Coding, Robotics will be conducted for school students according to the current technological development.
  • Special summer classes will be conducted with top achievers in each field.
  • Psychiatrists and health doctors provide advice on solid food intake and training on exercise, style, dress, manners and social interaction.
  • Awareness about Tamil culture and tradition will also be created among the students.
  • All the trainings for this purpose will be provided as per requirement such as live training with the best trainers, online training, training in their respective colleges and district wise training.
  • A guidance counseling center will be established in every school. A separate curriculum and syllabus will be developed for this and regular classes will be conducted for the students studying from class 9 to 12.
  • A mentoring system will be introduced for students studying in government schools with former students.
  • In this scheme, the college students will be taught foreign languages ​​according to their choice to ensure employment abroad.
  • Government vocational training centers will be upgraded to Industry 4.0 standard.
  • These series of trainings will also ensure the admission of the students to the top institutes/prestigious universities/skill development institutes of the country according to their merit and interest.
  1. பிரதமரின் விவசாய வருவாய் பாதுகாப்பு திட்டம் / PRADHAN MANTRI ANNADATA AAY SANRAKSHAN ABHIYAN (PM-AASHA)

TAMIL

  • தொடக்கம் – செப்டம்பர் 12, 2018
  • பயனாளிகள் – விவசாயிகள்

நோக்கம்

  • தங்கள் உற்பத்திக்கேற்ற விலையை இத்திட்டம் மூன்று உப திட்டங்களை உள்ளடக்கியது.
  • ஆதரவு விலைத் திட்டம் (PSS),
  • விலைப் பற்றாக்குறை வழங்கும் திட்டம் (PDPS),
  • தனியார் கொள்முதல் மற்றும் இருப்புச் சரக்குத் திட்டம் (PDPS).
  • இதன் மூலம், எப்போதெல்லாம் குறைந்த பட்ச ஆதரவு விலையை விட சந்தை விலை குறைகிறதோ, அப்போது மத்திய மாநில அரசுகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் குறைந்த பட்ச ஆதரவு விலைக்கு விளைபொருட்களை அளிக்கிறது, வாங்க அனுமதி
  • குறைந்த பட்ச ஆதரவு விலைக்கு குறையும்போது வாங்கும் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடு கட்டுதல் ஆகியன.

 

நிதி ஒதுக்கீடு

  • ரூ.45,550 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ENGLISH

  • Commencement – ​​September 12, 2018
  • Beneficiaries – Farmers

Purpose

  • The scheme consists of three sub-schemes which are priced according to their production.
  • Price Support Scheme (PSS),
  • Price Deficit Provision Scheme (PDPS),
  • Private Purchase and Stockpile Scheme (PDPS).
  • Through this, whenever the market price falls below the minimum support price, central state governments and private companies are allowed to purchase produce at the minimum support price.
  • Compensation for losses incurred by buying firms when the minimum support price falls below the minimum support price.

Allocation of funds

  • An allocation of Rs.45,550 crore has been made.
  1. தேசிய மூங்கில் வளர்ப்பு திட்டம் / NATIOANAL BAMBOO MISSION UNDER NMSA (RESTRUCTURED)

TAMIL

  • தொடக்கம் – ஏப்ரல் 25, 2018
  • பயனாளிகள் – விவசாயிகள்

நோக்கம்

  • மூங்கில் சாகுபடி பரப்பளவை அதிகரித்தல், விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக்குதல்,
  • காடுகள் அல்லாத அரசு மற்றும் தனியார் நிலங்களில் மூங்கில் வளர்ப்பை அதிகரித்தல்.
  • விவசாயிகளுக்கான மூங்கில் வணிகம் பற்றிய பயிற்சி வழங்குதல்
  • மூங்கில் சார்ந்த சிறுதொழில் அபிவிருத்தி மற்றும் ஏற்றுமதி பயிற்சி,
  • 1 லட்சம் ஹெக்டேர் அளவிற்கு மூங்கில் சாகுபடி பரப்பை அதிகரிக்க இலக்கு நிர்ணயம்,

விவசாயிகளுக்கான பலன்கள்

  • நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ 1 லட்சம் விவசாயிகள் பலனடைவார்கள், நாடு முழுவதும் 329 மூங்கில் நாற்றாங்கால்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது,
  • முதல் ஆண்டு ரூ.4,000 மானியமாக ஒரு ஹெக்டேருக்கும். அடுத்த ஆண்டு முதல் வளர்ச்சிக்கு ஏற்றவாறும் மானியம் வழங்கப்படுகிறது.
  • பின்னேற்பு மானியமாக ரூ.25,000 விவசாயிகளுக்கும், பொது இடங்களுக்கு ரூ.50,000 வழங்கப்படுகிறது. இதற்கென ரூ.1,290 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அருகில் உள்ள தோட்டக்கலைத்துறை அலுவலகம் www.nbm.nic.in நிதி ஒதுக்கீடு தொடர்புக்கு இணையம்
  • மூங்கில் சாகுபடி இதுவரை 7,337 ஹெக்டேர் சாகுபடி நடைபெற்றுள்ளது. (Dec, 2021)

ENGLISH

  • Commencement – ​​April 25, 2018
  • Beneficiaries – Farmers

Purpose

  • Increasing the area under bamboo cultivation, doubling farmers’ income,
  • Increasing cultivation of bamboo in non-forest government and private lands.
  • Providing training on bamboo business to farmers
  • Bamboo Small Business Development and Export Training,
  • Setting a target to increase the area under bamboo cultivation to 1 lakh hectares,

Benefits to farmers

  • 1 lakh farmers will be benefited directly or indirectly, 329 bamboo nurseries have been established across the country.
  • Rs.4,000 subsidy per hectare in the first year. The subsidy is also given on a growth basis from next year onwards.
  • A follow-on subsidy of Rs.25,000 is given to farmers and Rs.50,000 to public places. A fund of Rs.1,290 crore has been earmarked for this. Nearest Horticulture Office www.nbm.nic.in Fund Allocation Contact Web
  • So far 7,337 ha of bamboo cultivation has been done. (Dec, 2021)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *