நடப்பு விவகார – பொது அறிவு வினாடி வினா பிரிவில் ஒவ்வொரு போட்டியாளருக்கும் பரீட்சை எழுதுவதை எளிதாக்குவதை TNPSC SHOUTERS நோக்கமாகக் கொண்டுள்ளது
இத்தேர்வில், பொது அறிவிப் பிரிவில் இருந்து 40 முதல் 50 கேள்விகள் கேட்கப்படும்.
தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களின் மன உளைச்சலைக் குறைக்கும் வகையிலும் கீழே சில தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
மாணவர்களுக்கு ஆக்கப்பூர்வமான சூழ்நிலையை உருவாக்குவதின் முக்கிய படிநிலையாக இந்த கட்டுரை இருக்கும் என்று நம்புகிறோம்.
நெகிழி ஒழிப்பு / PLASTIC BAN
TAMIL
- நெகிழி அறிமுகம்
- பிளாஸ்டிக் (நெகிழி) என்பது கிரேக்க வார்த்தையான “பிளாஸ்டிக்கோஸ்” (Plastikos) என்பதிலிருந்து வந்ததாகும்.
- இதற்கு நினைத்தது போல் உருவம் கொடுக்கப்படும் என்பது பொருள்.
- நெகிழி என்பது அதிக அடர்த்தியான மூலக்கூறுகளைக் கொண்ட கரிம பாலிமர்களும், பெரும்பாலும் வேறுசில பொருட்களையும் கொண்டதாகும். இவை பெட்ரோலிய பொருட்களிலிருந்து செயற்கையாக உருவாக்கப்படுபவை.
- முதல் செயற்கை நெகிழி, பேக்லைட் 1907 ஆம் ஆண்டு பெல்ஜியத்தை சேர்ந்த வேதியியலாளர் லியோ பேக்லண்ட் (Leo Bakeland) என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
- நெகிழியும் சுற்றுசூழலும்
- உலகளவில் ஆண்டுக்கு 60 மில்லியன் டன் நெகிழியானது உற்பத்தி செய்யப்படுகிறது. 9 சதவீதமானவை மறுசுழற்சி செய்யப்படுகிறது 12 சதவீதமானவை எரித்து அழிக்கப்படுகிறது. மீதமுள்ள 79 சதவீதமான நெகிழி கழிவுகள் சூழலில் வீசப்படுவதனால் நீர்நிலைகளிலும் சமுத்திரங்களிலும் சேர்கிறது.
- வருடமொன்றில் 1 லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் நெகிழி கழிவுகளால் இறந்து போகிறது. அரிய வகை கடலாமைகள் போன்றன அதிகம் இறக்கின்றன.
- நெகிழி தொடர்பான மாசடைதலில் உலகளவில் இந்தியா 12 ஆவது இடத்தில் உள்ளது. இந்திய அளவில் தமிழ்நாடு இரண்டாமிடத்தில் உள்ளது.
- நெகிழியின் வகைகளும் பயன்களும்
- வெப்பத்தால் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப நெகிழிகளில் இளகும் வகை, இறுகும் வகை என இரு வகைகளாக பிரிக்கலாம்.
- 1. வெப்பத்தால் இளகி, குளிர்வித்தால் இறுகி பின் எத்துனை முறையும் மாற்றி மாற்றி செய்யமுடியக்கூடிய நெகிழி இளகும் வகை நெகிழி ஆகும். இவை மறு சுழற்சி செய்யக் கூடியவை.
- a)செல்லுலாயிட்: எளிதில் தீப்பற்றக் கூடியது. விளையாட்டுப் பொருள்கள், தகடுகள் செய்யவும் பயன்படுகிறது.
- b) பாலி புரோப்பிலின்: கொதி நீரில் உருமாற்றம் அடையாததால் பால் புட்டிகள், ஆரோக்கியப் பொருள்கள், குப்பிகள் ஆகியவை செய்யவும், இலேசாகவும் பலமிக்கதாகவும் உள்ளதால் நீர்பாய்ச்சும் குழாய்கள், கயிறுகள் ஆகியவை செய்யவும் பயன்படுகின்றன.
- c) பாலிவினைல் குளோரைடு: மணமற்ற நிறமற்ற இளகும் நெகிழியாகும். மின்கம்பிகளில் இன்சுலேட்டர்கள், நீரேற்றும் குழாய்கள் ஆகியவை செய்யப் பயன்படுகிறது.
- d) பாலிவினைல் அசிட்டேட்: வண்ணப் பூச்சுகள் ஒட்டும் பசைகள் ஆகியவை பெருமளவில் தயாரிக்கப் பயன்படுகிறது.
- e) வினைல் : டெரிலின் இழை போலவே இதில் இழைகள் தயாரிக்கலாம். இவ்விழைகள் சுருங்காது. தூசி படியாது. அழுக்கை எளிதில் நீக்கலாம். வண்ணமேற்றலாம். இவற்றிலிருந்து ஆடைகள் தயாரிக்கிறார்கள்.
- f) அக்ரிலிக்: நிறமற்றது. ஒளிபுகக் கூடியது. கண்ணாடிக்கு மாற்றுப் பொருளாகவும், இயந்திரம், கட்டிடப் பொருள்கள் செய்யவும் பல்வேறு சாதனங்களிலும் பயன்படுகிறது.
- g) செல்லுலோஸ் அசிட்டேன்: இதனுடன் வண்ணம் சேர்த்து பெருமளவில் மோட்டார் தொழிலில் தேவையான பல பொருள்களைச் செய்கின்றனர்.
- h) ஈதைல் செல்லுலோஸ்: பொருள்கள் மீது மேல் பூச்சு அமைக்கவும், புகைப்படத் தகடுகள் செய்யவும் பயன்படுகிறது.
- 2. இளக்கிப் பின் மீண்டும் இறுகிய பின், மீண்டும் வெப்பப்படுத்தி இளக்க முடியாத, மீளாத நெகிழி இறுகும் நெகிழி ஆகும். இது எளிதில் நொறுங்கக் கூடியது. இது இளகும் வகையை விட தரம் குறைந்தவை.
- a) ஆல்கைடு ரெசின்: பொருள் வெப்பம், ஈரத்தால் பாதிக்கப்படாதது. மின்சாரம் கடத்தாது. உறுதியானது. கடினமானது. ஒளி புகும். எனவே விமானம், மொட்டார் பாகங்கள், தகடு, குழாய்கள், தண்டுகள், இன்சுலேட்டர்கள் போன்றவை செய்யப் பயன்படுகிறது.
- b) மெலமின் ரெசின்: இது எளிதில் தேயாது மின்சாதன பாகங்கள் (குறிப்பாக மின்விசிறி) செய்யப் பயன்படுகிறது.
- c) பீனாலிக் ரெசின்: மலிவு விலை மின்சுவிச்சுகள், பலகைகள், தொலைபேசிகள் செய்யப் பயன்படுகின்றது
நெகிழியின் தீமைகள்
- நெகிழிப் பொருள்கள் எளிதில் அழிவதில்லை. சராசரியாக ஒரு பாலித்தீன் பையின் பயன்பாட்டுக் காலம் 12 முதல் 20 நிமிடங்களே என்றும் அவை அழிய 1000 ஆண்டுகளுக்கும் அதிக காலம் பிடிக்கும். நெகிழி மறுசுழற்சி என்பதும் பெரிதும் பயன்தரப்போவதில்லை.
- ஏனென்றால் நெகிழிப் பொருட்களில் 10 சதவீதப் பொருள்களே மீண்டும் பயன்படுத்தத் தக்கவையாக இருக்கின்றன. மற்ற 90 சதவீதப் பொருட்களும் வீணே எரிக்கப்பட்டுவிடுகின்றன. ‘இன்சினரேசன்’ என்னும் கருவி இப்போது நெகிழிக் குப்பைகளை எரிக்கப் பயன்படுகிறது.
- அவையும் டையாக்சின் என்ற நச்சுப் புகையைத்தான் கூடுதல் தீமையாகத் தருகின்றன. மறுசுழற்சி, கழிவு மேலாண்மை போன்றவை பயனற்றவையாகவே கருதப்படுகின்றன.
- மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அளித்துள்ள தரவுகளின்படி, நாடடில் உள்ள 60 முக்கிய நகரங்களில் ஒரு நாளைக்கு மட்டும் 4,059 டன் பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகின்றன.
- தொழிற்சாலைகளில் இவை மறு சுழற்சி செய்யப்படும் போதும், எரிக்கப்படும் போதும் வெளியேறும் வாயுக்கள் நச்சுத் தன்மை உடையதாக இருப்பதால், அருகிலுள்ள மக்களின் உடல்நலனாது பெரிதும் பாதிப்புக்குள்ளாகிறது. தோல்நோய், புற்று நோய், ஒவ்வாமை, மூச்சுக் குழாய் பாதிப்பு, குடல் புண், செரிமானமின்மை, நரம்புத்தளர்ச்சி, ரத்த, சிறுநீரகச் செயல் குறைபாடு, நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவு போன்றவை ஏற்படக்கூடும்.
- பாலித்தீன் பைகள் கால்வாய்களில் அடைத்துக் கொள்வதால் நீர் வழிகள் அடைபட்டு மழைக் காலங்களில் வெள்ளப் பெருக்கு போன்ற அபாயங்கள் ஏற்படுகின்றன. நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்கள் பரவுகின்றன. நிலத்தடி நீர் பெருகுவதைத் தடுக்கின்றன.
- மனிதர் உண்டுவிட்டு கீழே போடும் நெகிழிப் பைகளைத் உ தின்னும் விலங்குகளின் உணவுக் குழாய்கள் பாதிக்கப்பட்டு அவைகள் இறக்க நேரிடுகின்றன.
- மட்காத நெகிழிப் பொருள்கள் வேளாண் நிலங்களில் தங்கி அதன் வளத்தைக் குறைத்து நஞ்சாக்குகிறது. பயிர் வளர்ச்சியையும் பாதிக்கிறது.
- கடலில் எறியப்படும் நெகிழிப் பொருள்கள் கடல்வாழ் உயிரினங்களுக்கும், வனப்பகுதியில் எறியப்படுபவை வனவாழ் உயிரினங்களுக்கும் தீங்கு விளைவித்து பல்லுயிர் பெருக்கச் சூழலைப் பெரிதும் பாதிக்கின்றன.
- டயர்கள் எரிக்கப்படும்போது காற்று மாசுபடுவதால் தோல் நோய்கள், நுரையீரல் தொடர்பான பிரச்சனைகள், புற்றுநோய் போன்றவைகள் ஏற்படுக் காரணமாகின்றன.
நெகழி ஒழிப்பதில் மத்திய அரசின் பங்கு
- இந்திய அரசு பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள், 2016-ல் 50 மைக்ரான் தடிமனுக்குட்பட்ட பிளாஸ்டிக் கைப்பைகளை தேசிய அளவில் தடைசெய்து உத்தரவிட்டது.
- மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேஹர் கடந்த மார்ச் 11, 2021-இல் வெளியிட்ட அரசாணையில் இந்தியா முழுவதும் 50 மைக்ரானுக்கும் குறைவான பிளாஸ்டிக் பயன்பாட்டினை முழுவதுமாகத் தடைசெய்து உத்தரவிட்டார். மேலும் அவர் உலக பெருங்கடல் தினத்தை முன்னிட்டு ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரமான ‘பிளாஸ்டிக் ஹேக்கத்தான் 2021-ஐ’ தொடங்கி வைத்தார்.
- மத்திய சுற்றுச்சூழல், காடு மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், செப்டம்பர் 2021-ஆம் ஆண்டில் 75 மைக்ரானுக்கும் குறைவான தடிமனுடைய பாலித்தீன் பைகளுக்குத் தடை விதித்தது.
- சமீபத்தில், இந்தியாவில் ஜூலை 1, 2022 முதல் ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்கை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டது. இந்த தடையை யாராவது மீறினால், 1986-ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் படி, அவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையோ ஒரு லட்சம் ரூபாய் அபராதமோ அல்லது இரண்டுமோகூட விதிக்கப்படும்.
நெகிழி ஒழிப்பதில் தமிழக அரசின் பங்கு
- தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
- பிளாஸ்டிக்கிற்கு மாற்று பொருள் தயாரிக்க மகளிர் சுயஉதவி குழுக்களை தமிழக அரசு ஊக்குவித்து வருகிறது.
- ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக்கால் ஏற்படும் மாசுபாட்டைத் தடுக்கவும், பாரம்பரிய துணிப்பைகளை பயன்படுத்தவும் தமிழக முதலமைச்சர் அவர்கள் 23.12.2021 அன்று “மீண்டும் மஞ்சப்பை” எனும் நிகழ்வினை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் தொடங்கி வைத்தார்.
- Shreeding Machine என்ற கருவியை தமிழகத்தின் அனைத்து நகராட்சிகளிலும் அமைத்து, சேகரிக்கப்படும் அனைத்து பிளாஸ்டிக் கழிவுகளையும் இந்த கருவியின் மூலம் மிக சிறிய துண்டுகளாக வெட்டி சாலை போடுவதற்கு பயன்படுத்தி வருகின்றனர்.
- இந்தியாவிலேயே முதல்முறையாக கோவை மாநகராட்சியில் நெகிழியை போலவே காணப்படும் பயோ பேக் அறிமுகப்படுத்தப்பட்டது
நெகிழி ஒழிப்பதில் மக்களின் பங்கு
- கடைக்குச் செல்லும் போதே துணிப்பைகளை எடுத்துச் செல்வதைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.
- வீட்டு நல்ல காரியங்களில் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பாக்கு மட்டைகளில் செய்யப்படும் குவளைகள், தட்டுக்களைப் பயன்படுத்தலாம்.
- படித்த இளைஞர்கள் தனியாகவோ, கூட்டு முயற்சியாகவோ இத்தகையத் தொழில்களைச் செய்ய முன்வரலாம்.
- பிளாஸ்டிக் குடங்களுக்குப் பதிலாக, மண்பானைகளைப் பயன்படுத்துதல்.
- நெகிழிக்கு மாற்றீடான இயற்கை உற்பத்திகளை உருவாக்குதல்.
- அநாவசியமாக காணப்படும் நெகிழி உற்பத்திகளை தவிர்த்தல்.
- ஒரே நெகிழி பைகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்தல்.
ENGLISH
Introduction to Plastic
- Plastic (plastic) comes from the Greek word “plastikos” (Plastikos).
- This means that it will be given shape as intended.
- Plastics are organic polymers with high molecular weight and often other materials. These are synthetically produced from petroleum products.
- The first synthetic resin, bakelite, was discovered in 1907 by Belgian chemist Leo Bakeland.
Plastic environment
- About 60 million tons of plastic are produced annually worldwide. 9 percent is recycled and 12 percent is incinerated. The remaining 79 percent of plastic waste is dumped into the environment and ends up in water bodies and oceans.
- 1 lakh marine life die from plastic waste every year. Rare species such as turtles die a lot.
- India ranks 12th globally in terms of pollution related to plastic. Tamil Nadu ranks second in India.
Types and uses of plastic
- According to the changes caused by heat, elastics can be divided into two types, elastic type and compressive type.
- 1. An elastic is a type of elastic that can be flexed by heat, tightened by cooling, and then changed in any number of ways. These are recyclable.
- a)Celluloid: Highly flammable. It is also used to make toys and plates.
- b) Polypropylene: It is used for making milk pastes, health products, bottles as it does not transform in boiling water, water pipes and ropes as it is light and strong.
- c) Polyvinyl Chloride: Odorless and colorless liquid. It is used to make insulators in electrical cables and water pipes.
- d) Polyvinyl Acetate: Widely used in the manufacture of colored coatings and adhesives.
- e) Vinyl : It can be made into fibers like Terylene fiber. These fibers do not shrink. No dust. Dirt can be easily removed. Can be colored. Clothes are made from these.
- f) Acrylic: Colorless. Translucent. It is also used as a substitute for glass, machinery and building materials in various devices.
- g) Cellulose Acetate: It is widely used in the motor industry with the addition of color.
- h) Ethyl Cellulose: Used for coating materials and making photographic plates.
- 2. Irreversible elastics that cannot be reheated and re-strained after stretching are elastic elastics. It crumbles easily. It is inferior in quality to the soft type.
- a) Alkyd Resin: Material unaffected by heat, moisture. Does not conduct electricity. is determined. is difficult. Light penetrates. Hence it is used to make aircraft, motor parts, plate, pipes, rods, insulators etc.
- b) Melamine Resin: It is used to make electronic parts (especially fans) that do not wear easily.
- c) Phenolic Resin: Used to make cheap electrical switches, boards, telephones
Disadvantages of plastic
- Flexible materials do not perish easily. An average polythene bag has a usage life of 12 to 20 minutes and takes more than 1000 years to decompose. Elastic recycling is also not going to help much.
- That’s because only 10 percent of plastic is recyclable. The other 90 percent of the material is wasted. A device called ‘incineration’ is now used to burn plastic waste.
- They also emit toxic fumes called dioxin as an added bonus. Recycling, waste management etc. are considered ineffective.
- According to data provided by the Central Pollution Control Board, 4,059 tonnes of plastic waste is generated every day in 60 major cities of the country.
- When these are recycled and burned in factories, the gases emitted are toxic and the health of nearby people is greatly affected. Skin disease, cancer, allergy, respiratory tract damage, intestinal ulcer, indigestion, nervousness, blood, kidney function deficiency, decreased immunity etc. may occur.
- Polythene bags get stuck in canals, causing blockage of waterways and risk of flooding during monsoons. Stagnant water breeds mosquitoes and spreads diseases like dengue and chikungunya. They prevent groundwater from rising.
- Animals that eat plastic bags thrown away by humans can get infected and die.
- Non-compostable plastics settle on agricultural land and reduce its fertility. It also affects crop growth.
- Plastics thrown into the sea harm the marine life and those thrown into the forest harm the wild life and greatly affect the biodiversity environment.
- Air pollution when tires are burnt causes skin diseases, lung related problems, cancer etc.
Central Government’s role in eradication of Plastic
- The Government of India’s Plastic Waste Management Rules, 2016 mandated a national ban on plastic handbags below 50 microns in thickness.
- Union Environment Minister Prakash Javadehar issued an order on March 11, 2021, ordering a complete ban on the use of plastic less than 50 microns across India. He also launched ‘Plastic Hackathon 2021’, an awareness campaign on single-use plastics, on the occasion of World Oceans Day.
- The Union Ministry of Environment, Forest and Climate Change has banned polythene bags less than 75 microns in thickness from September 2021.
- Recently, India has banned the use of single-use plastics from July 1, 2022. Anyone who violates this ban can be punished with imprisonment of up to 5 years or a fine of one lakh rupees or both, according to the Environment Protection Act, 1986.
Tamil Nadu Government’s Role in Eliminating Negizhi
- In Tamil Nadu, from January 2019, the Tamil Nadu government issued an ordinance banning 14 types of plastic products.
- The Tamil Nadu government is encouraging women’s self-help groups to produce alternatives to plastic.
- To prevent pollution caused by single-use plastic and to use traditional cloth bags, the Chief Minister of Tamil Nadu launched the event “Minthum Manjapai” on 23.12.2021 at the Kalaivanar Arena in Chepakkam, Chennai.
- A device called Shreeding Machine has been set up in all municipalities of Tamil Nadu and all the collected plastic waste is cut into very small pieces using this device to lay roads.
- For the first time in India, the Coimbatore Corporation has introduced a plastic-like bio bag
People’s Role in Eradication
- Make it a habit to carry clothes bags while going shopping.
- As an alternative to plastic in household favors, vases and plates made of gourd bats can be used.
- Educated youths can come forward to do such industries alone or in joint ventures.
- Using earthen pots instead of plastic jugs.
- Development of natural products to replace plastic.
- Avoid unnecessary elastic products.
- Repeated use of the same plastic bags.