RvelyVELU NACHIYAR HISTORY IN TAMIL: எங்களுடைய TAMILDAYTODAY இணையதளத்தில் முக்கியமான நாட்கள் குறித்த வரலாறு, வாழ்த்துக்கள் மற்றும் அனைத்து தகவல்களையும் விரிவாக காணலாம்.
இராணி வேலுநாச்சியார் பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் சிவகங்கைப் பகுதியின் இராணி மற்றும் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய பெண் விடுதலைப் போராட்டத் தலைவி. இவரே இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை ஆவார்.
To know More About – TNPSC Current Affairs
பிறப்பு
VELU NACHIYAR HISTORY IN TAMIL: ‘சக்கந்தி” இராமநாதபுரத்திற்கு அருகிலுள்ள ஊர். வேலுநாச்சியார் பிறந்தது இங்கேதான். தந்தை முத்து விஜயரகுநாதசெல்லத்துரை சேதுபதி. இராமநாதபுர மன்னர். தாய் முத்தாத்தாள் நாச்சியார். இவர்களின் ஒரே பெண் குழந்தை வேலுநாச்சியார்.
விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பது இந்தக் காலத்தில் நாம் சொல்லும் பழமொழி. ஆனால் அந்தக் காலத்தில் அதற்கு உதாரணமாய் இருந்திருக்கிறார் வேலுநாச்சியார்.
ஆண் வாரிசு போல வளர்க்கப்பட்டார். ஆயுதப் பயிற்சி பெற்றார்; பல மொழிகள் கற்றார். சிறுவயதில் வேலுநாச்சியாருக்கு தெரிந்த ஒரே மூன்றெழுத்து வார்த்தை வீரம். தெரியாத மூன்றெழுத்து வார்த்தை பயம்.
திருமணம்
VELU NACHIYAR HISTORY IN TAMIL: வேலு நாச்சியாரின் அழகிலும் வீரத்திலும் மனதைப் பறிகொடுத்த சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதர், வேலு நாச்சியாரை மணமுடித்தார். அது 1746ம் வருடம். வேலுநாச்சியார் சிவகங்கைக்கு குடிபுகுந்தார்.
சிவகங்கை சீமை சீரும் சிறப்புமான சீமை. அதை சீர்குலைக்க வந்தது ஒரு சிக்கல். ஆற்காடு நவாப்பின் பெரும்படை ஒன்று இராமநாதபுரத்தைத் தாக்கி கைப்பற்றியது.
நவாபின் அடுத்த குறி சிவகங்கைதான். ஆசைப்பட்ட இடங்களை அடையாமல் விட்டதில்லை நவாப். நேரம் பார்த்து நெருங்குவான். நெருக்குவான். கழுத்தை நெரித்துவிடுவான்.
சிவகங்கை மன்னர் முத்துவடுமுகநாதரும் லேசுபட்டவர் அல்ல. போர்க்கலைகள் தெரிந்தவர். வீரம் செறிந்தவர். விவேகம் பொதிந்தவர். முத்துவடுக நாதரின் மனைவியான வேலு நாச்சியார் வீரனுக்கு ஏற்ற வீராங்கனையாகத் திகழ்ந்தார்.
இவர்களுக்கு உறுதுணையாக போர்ப்படை தளபதிகளாக “சின்ன மருது, பெரிய மருது சகோதரர்கள்”. வீரத்துக்கு பெயர் பெற்றவர்கள்.
மன்னர் மரணம்
VELU NACHIYAR HISTORY IN TAMIL: நேரம் பார்த்துக் கொண்டிருந்த நவாப்புக்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்தது. சிவகங்கையைத் தாக்க ஆங்கிலேயேப் படைகள் நவாப்புக்கு உதவ முன்வந்தன.
அவர்களிடம் நவீனரக ஆயுதங்கள் இருந்தன. அவற்றைக் கொண்டு சிவகங்கையைத் தாக்கி தன் கட்டுக்குள் கொண்டுவரத் திட்டமிட்டான் நவாப். ஒரு முறை மன்னர் முத்து வடுகநாதர் காளையர் கோயிலில் வழிபாடு செய்து கொண்டிருந்தபோது நவாபின் படைகள் காளையர் கோயிலைச் சுற்றி வளைத்தனர். கொடூரமாய் தாக்கினர்.
ஆங்கிலேயர் கொடுத்த போர்ச் சாதனங்களைக் கொண்டு தாக்கினர். வடுகநாதரும் அவரது படைகளும் வீரப்போர் புரிந்தனர். இருந்தும் அவர்களால் அந்தத் தாக்குதலைச் சமாளிக்க இயலவில்லை.
வடுகநாதர் வாளால் வெட்டப்பட்டு இறந்தார் இளவரசியும் கொல்லப்பட்டார். காளையர் கோயில் கோட்டை நவாப்படைகளின் வசமாகியது.
ஆங்கிலேயர் படையெடுப்பு
VELU NACHIYAR HISTORY IN TAMIL: 1772-இல் ஐரோப்பியரின் படையெடுப்பால் கணவரை இழந்த வேலுநாச்சியார் நாட்டை மீட்டெடுக்க காத்திருந்தார். இந்தப் படையெடுப்பை எதிர்க்க நினைத்த வேலுநாச்சியார் விருப்பாட்சியில் தங்கி ஹைதர் அலியைச் சந்தித்து உருது மொழியில் ஆங்கிலேயர் எதிர்ப்புப் பற்றிப் பேசி விளக்கினார்.
வேலு நாச்சியாரின் உருது மொழித் திறமையைக் கண்டு ஆச்சர்யப்பட்ட ஹைதர் அலி உதவிகள் பல செய்வதாக உறுதியளித்தார். 8 காலம் திண்டுக்கல் கோட்டை, விருப்பாட்சிக் கோட்டை, அய்யம்பாளையம் கோட்டை என இடம் மாறி மாறி முகாமிட்டு வாழ்ந்து வந்தார்.
மருது சகோதரர்களின் பெரும் முயற்சியினால் சிவகங்கை மக்களை ஒன்று திரட்டி ஓர் எதிர்ப்புப்படை ஒன்று உருவாக்கப்பட்டது. வேலுநாச்சியார் மருது சகோதரர்களே இப்போராட்டத்துக்குத் தலைமை தாங்கினர்.
படை திரட்டல்
VELU NACHIYAR HISTORY IN TAMIL: 1780- ஆண்டு ஜூன் மாதம் ஒரு படை திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்டது. ஹைதர் அலி 5000 குதிரை வீரர்களையும் 5000 போர்வீரர்களையும், பீரங்கிப்படை ஒன்றையும் அனுப்பி வைத்தார்.
படை வைகை ஆற்றின் வழியில் சோழவந்தானையும், பிறகு சிலைமானையும், அதன் தொடர்ச்சியாக திருப்புவனம், முத்தனேந்தல், நகரங்களை வென்ற பிறகு, கடைசி யுத்தமாக மானாமதுரை நகரத்தில் போர் பயிற்சி பெறாத மக்களின் துணைகொண்டு அந்நிய பரங்கியர்களை வெற்றிக்கொண்டனர்.
அதன் பிறகு இராணியின் தோரணையோடு, இராணி வேலுநாச்சியார் சிவிகையின் மூலம் படைவீரர்கள் புடை சூழ விழாக்கோலம் பூண்ட சிவகங்கை வந்தார்
இறுதி நாட்கள்
VELU NACHIYAR HISTORY IN TAMIL: 1793-இல் வேலு நாச்சியாரின் பேத்தியின் மரணத்தால் நாச்சியாருக்குத் துயரம் அதிகமானது. அதனால் விருப்பாட்சி அரண்மனையில் தங்கினார்.
பெரும் போராட்டங்களை நடத்தி நாட்டை மீட்ட வேலுநாச்சியார் டிசம்பர் 25, 1796 அன்று இறந்தார். இதன் தொடர்ச்சியாக சிவகங்கைச் சீமையை ஆட்சி புரிந்த மன்னர்களின் பட்டியல் கீழே உள்ளது.
குயிலி
VELU NACHIYAR HISTORY IN TAMIL: இதில் குறிப்பிட வேண்டியது, குயிலி என்னும் வீர பெண், இவர் தான் முதல் உயிர்பலி இரானியின் படையில். இவரின் செயலை கண்டு போர் தந்திரம் தெரிந்தவர் கூட மிரண்டு தான் போய் இருந்தனர்.
இரானி வேலு நாச்சியாரின் வியூகம் முதலில், ஆங்கிலேயரின் ஆயுத கிடங்கை அழிக்க வேண்டும், அதற்கு துணை நின்றவர் இந்த குயிலி. இவரின் செயலை கண்டு மிரளத்தவர் யாரும் இருக்க முடியாது.
1780-ல் நவராத்திரி அன்று முதன் முதலில் ராஜா ராஜேஸ்வரி கோவிலில் நுழையும் போது, எல்லோரும் கோவிலுக்குள் சென்று விட்டனர். இந்த குயிலிஐ தவிர அங்கு விளக்கேற்ற வைத்து இருந்த எண்ணையை தன் மேல் ஊற்றி கொண்டே ஆங்கிலேயரின் ஆயுத கிடங்கு பக்கம் செல்கிறார் குயிலி.
கடைசியில் நெருப்பை பற்ற வைத்து வெற்றி வேல், வீர வேல் என்று சொல்லும் போது உலகமே திகைத்தது, ஆங்கிலேயரையும் சேர்த்து. இதனால் தான் வீர மங்கை வேலு நாச்சியார்-ன் வரலாறு இருக்கும் வரையிலும் இந்த வீர தாய் குயிலியின் வரலாறும் இருக்கும்.
மருது சகோதரர்கள்
VELU NACHIYAR HISTORY IN TAMIL: மருது சகோதரர்கள் உடையார் சேர்வை என்ற மூக்கையா பழனியப்பன் சேர்வை மற்றும் ஆனந்தாயி என்ற பொன்னாத்தாள் தம்பதிகளின் மகன்கள்.
அவர்கள் ராமநாதபுரத்தில் உள்ள கொங்காலு தெருவில் இருந்து வந்தவர்கள். அவர்கள் பண்டைய பாளையகாரர்கள் வழி வந்தவர்களோ அல்லது அச்சாதியில் பிறந்தவர்கள் அல்ல.
சேர்வைக்காரன் என்பது சாதிப்பெயராகும் மருது என்பது குடும்பபெயராகும் ஆகும். மருது சகோதரர்கள் முத்து வடு கநாததேவரின் கீழ் பணியாற்றினர். பின்னர் அவர்கள் தளபதி நிலைக்கு உயர்த்தப்பட்டனர்.
பூமாராங்க் (வளரி) என்பது இந்தியாவில் உள்ள விசித்திரமான ஆயுதம். இந்த ஆயுதங்களின் இரண்டு வடிவங்கள் இந்தியாவில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ஆயுதங்கள் பொதுவாக மரத்தினால் செய்யப்பட்டவை.
இதன் மேல் பகுதி கனமானதாகவும், வெளிப்புற விளிம்பில் கூர்மையாகவும் இருக்கும். தமிழ்மொழியில் அவைகளின் பெயர் வளரிகுச்சி என்பதாகும்.
மருது சகோதரர்கள் வளரிகுச்சியை எறியும் கலையில் வல்லுநர்கள் என்று கூறப்படுகிறது. ஆங்கிலேயர்களுக்கு எதிரான பாளையப்போர்களில் மருது சகோதரர்கள் வளரி ஆயுதத்தைப்பயன்படுத்தினார் என்றுகூறப்படுகிறது.
12,000 ஆயுதம் தாங்கிய வீர்களுடன் மருது சகோதரர்கள் சிவகங்ககைச்சூழ்ந்தனர் மற்றும் நவாபின் பிரதேசங்களை சூறையாடினர். 1789 மார்ச் 10 ம் தேதி நவாப் சென்னை கவுன்சிலுக்கு உதவிக்காக முறையிட்டார்.
ஏப்ரல் 29, 1789 அன்று பிரிட்டிஷ் படைகள் கொல்லங்குடியில் மருது படைகளை தாக்கின. இங்கு நடைப்பெற்ற பெரியசண்டையில் பிரிட்டிஷ்படைகள் மருதுபடைகளினால் தோற்கடிக்கப்பட்டது.
பாஞ்சாலங்குறிச்சியின் மன்னன் வீரபாண்டியகட்டபொம்மனுடன் மருதுசகோதரர்கள் நெருங்கிய தொடர்பில் இருந்தனர். மருதுசகோதரர்களுடன் கட்டபொம்மன் அடிக்கடி ஆலோசனைகளை நடத்தினார்.
கயத்தாறில் 1799 அக்டோபர் 17 இல் கட்டபொம்மனுக்கு மரணதண்டனை நிறைவேற்றிய பின்பு சின்னமருது கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரைக்கு சிவகங்கையில் தஞ்சம் அளித்தார்.
அவர் இந்துக்கள், முஸ்லிம்கள் அனவரும் ஆங்கிலேயருக்கு எதிராகப்போராட தென்னிந்தியத் தீபகற்பத்திலுள்ள மக்களுக்கு ஒரு ஜம்பு தீபப்பிரகடனத்தை அறிவித்தார்.
கடைசியில், ஆங்கில மேலாதிக்கத்திலிருந்து தாய்நாட்டை விடுவிக்க போராடிய காரணத்திற்காக மருதுபாண்டியர்கள் கைது செய்யப்பட்டனர்.
1801 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24 ம் தேதி சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள கோட்டையின் சிதறல்கள் மீது போராளிகளான மருதுபாண்டியனுக்கும், அவரது சகோதரன் வெள்ளைமருதுக்கும் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.